கிளிநொச்சிகிழக்கு மாகாணம்செய்திகள்பிரதான செய்திமன்னார்முல்லைத்தீவு

தேசிய எரிபொருள் அட்டை பெற்றவர்களுக்கு விசேட நடைமுறை அறிமுகம்

தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்து பெற்றுக் கொண்டவர் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாவது:

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே 21ஆம் திகதி முதல் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்துகொள்ள வேண்டுமாயின் FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என ரைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகை அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் பொதுமக்கள் www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று தேசிய எரிபொருள் அட்டையை பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்– என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051