செய்திகள் பிரதான செய்தி

அறிமுகமானது “மைபஸ்” கைபேசி செயலி

பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அலைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) அறிமுகப்படுத்தினார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மைபஸ் (MYBUS-SL) எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளதுடன், பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன், ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தின் ஊடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பஸ்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் Online ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.informatics.NTC

Related posts

நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல்

G. Pragas

இராணுவத்தின் முகமாலை படுகொலை குறித்து பூரண விசாரணை – ஆளுநர் பணிப்பு!

G. Pragas

திடீரென இறந்து விழும் காகங்கள் !

Tharani