செய்திகள் யாழ்ப்பாணம்

தேசிய மட்டத் தனி நடிப்பில் யாழ் மாணவன் முதலிடம்

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டிகள் இன்று (13) கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இவரை நெறிப்படுத்தியவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் திருமதி துகாரதி ஞானச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட வழிபாடுகள்

reka sivalingam

தமிழ் பிரதி நிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.!

Tharani

மாவடி துயிலும் இல்லம்

reka sivalingam