செய்திகள் விளையாட்டு

தேசிய மட்ட குண்டு போடுதல்: புதிய சாதனையைப் பதிவு செய்த மிதுன்ராஜ் !

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

நேற்று முன் தினம் (31) நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் 15.95 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

2018ம் ஆண்டு பண்டாரவினால் எறியப்பட்ட 15.67 மீற்ரர் தூரத்தையே இவர் 15.95மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புலிகள் மீள உருவாகி விட்டனர் என்று சொல்ல முடியாது!

G. Pragas

பதவியேற்றதும் போர் வீரர்களுக்கு விடுதலை!

G. Pragas

ஒருமித்தநாடு ஒருமைப்பாடு என்ற விடயத்தை உருவாக்குவேன் – முல்லையில் சஜித்

G. Pragas

Leave a Comment