செய்திகள் விளையாட்டு

தேசிய மட்ட பளுதூக்கல்; செல்வநாயகபுரம் இ.ம.வி மாணவிக்கு தங்கம்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கலில் திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவி நாகேஸ்வரன் மிதுசா 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

திருகோணமலைக்கு பெருமை தேடித்தந்நத மிதுசாவையும், அவரது பயிற்றுவிப்பாளர் க.உமாசுதனையும் திருகோணமலை வலய கல்வி அலுவலக பணிப்பாளர்களும், உத்தியோகத்தர்களும் வரவேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை விஜய் நற்பணி மன்றத்தினரும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

Related posts

கபே அமைப்பின் இலஞ்ச ஊழல் கருத்தமர்வு இன்று கச்சேரியில் நடந்தது

G. Pragas

பிரச்சினைகளை வைத்திருக்காமல் அகற்றி விட வேண்டும் – கோத்தாபய

G. Pragas

பொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அறுவருக்கு மறியல்

G. Pragas

Leave a Comment