செய்திகள் விளையாட்டு

தேசிய மட்ட பளுதூக்கல்; வயாவிளான் ம.க தங்கம் – இரு வெள்ளி வென்றது

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி ஒரு தங்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை கைப்பற்றினர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

20 வயதிற்குட்பட்ட பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில் நிதுர்சனா 125 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 49 கிலோ நிறைப் பிரிவில் அபிசாக் 106 தூக்கி வெள்ளி பதக்கத்தையும், 71 கிலோ நிறைப் பிரிவில் தனுசியா 120 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Related posts

தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல்

admin

சிங்கப்பூர் செல்ல கோத்தாவிற்கு அனுமதி!

G. Pragas

கோத்தாவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்தார் ஹிருணிகா

G. Pragas

Leave a Comment