செய்திகள் பிரதான செய்தி

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை!

கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாத்தறை – ஹம்பாந்தோட்டை பேருந்து சேவைகள் ஆரம்பம்!

reka sivalingam

ரணிலா? சஜித்தா? வாக்கெடுப்பை கோருகிறார் சுஜீவ

G. Pragas

இஸ்ரேல் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா!

Bavan