செய்திகள் பிரதான செய்தி

தேரரின் உடலை நீராவியடி ஆலயத்தில் எரிக்க நீதவான் தடை விதித்தார்!

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் நேற்று புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படையினர் ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று பின்னிரவு முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொண்டனர். இதனையடுத்து உடலத்தை ஆலயத்தில் எரிப்பதற்கு மட்டும் தடை விதித்து முல்லைத்தீவு பதில் நீதவான் இன்று (22) அதிகாலை 1 மணியளவில் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

8000 கோடி ரூபாய் நீதியை அமுல்படுத்த அனுமதி

G. Pragas

ரயில் தடம்புரண்டது; 250 பயணிகளும் தப்பினர்

G. Pragas

வீதிப் போக்குவரத்து பணிகளில் முப்படைகள்!

G. Pragas

Leave a Comment