கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

தேரர்களுக்கு எதிராக வாழைச்சேனை நீதிமன்றம் முடக்கம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (24) பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் ஆகியோர் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் அனைவரும் தங்களது பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இப்பகிஸ்கரிப்புக் காரணமாக செவ்வாய்கிழமை நாட்களுக்குரிய வாழைச்சேனை திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் எதிர்வரும் 2019.11.26ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், குறித்த இடத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

பௌத்த பிக்குகளால் தாக்கப்பட்டோம் என குறிப்பிட்டு சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (கு)

Related posts

விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்! நாசா கண்டுபிடிப்பு.!

Tharani

“கொரோனா” காரணமாக எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

கதிர்

சஜித்தின் சின்னம் தொலைபேசி ?

G. Pragas