செய்திகள் முல்லைத்தீவு

தேரர்களுக்கு எதிரான பேரணியின் புகைப்படத் தொகுப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலக வாயிலில் பொதுபலசேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் உருவப்படத்தினை எரியூட்டி மக்கள் ஆரவாரம் செய்தனர்.

நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அத்துமீறி குடியிருந்த மேதாலங்க தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கோவில் வளாகத்திலேயே தகனம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் நீதிமன்றம் கோவில் வளாகத்தில் உடலை தகனம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையிலும், அந்த உத்தரவை மீறிய ஞானசார தேர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்த கோவில் வளாகத்தில் இவ்வாறு அவ்வுடலினை தகனம் செய்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவு மீறப்படக்கூடாது, என தடுத்த சட்டத் தரணிகளும் அங்கு தேரர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாள், இச்சம்பவத்திற்கு எதிரப்புத் தெரிவிக்கும் முகமாக, முல்லைத்தீவு – உணாபிலவு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஒன்றுகூடிய தமிழ்மக்கள் அங்கிருந்து எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை வந்தடைந்து, மாவட்டசெயலகத்திற்கு முன்பும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் ஞானசாரதேரரின் உருவப் படத்தினை காலணியால் தாக்கியதுடன் தீயில் எரியூட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், மத குருக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளான மக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது பாரிய எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(56)

Related posts

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்

G. Pragas

சத்தமாக பாடல் ஒலிபரப்பும் பஸ்களின் அனுமதி இரத்து!

Tharani

இலஞ்சம் பெற்ற அறுவர் அதிரடிக் கைது!

G. Pragas