செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலிய வீதி பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை மறைப்பதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

‘பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சியின் சின்னம் ஆகியன வரையப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த செயற்பாடானது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரரான செயற்பாடாகும். எனவே அவ்வாறான செயலில் ஈடுபடுவார்கள் மீது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்’ – என்றார்.

Related posts

யாழ் பேருந்து நிலையத்தில் பதற்றம்; பயனிகள் பரிதவிப்பு

கதிர்

“இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை

G. Pragas

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

Tharani