கிழக்கு மாகாணம் செய்திகள்

தேர்தல் நடவடிக்கையை விலக்கி வைப்பதே சிறப்பு – கூறுகிறார் துரையர்

“கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் வெவ்வேறு மனநிலை, உடல்நிலை, பொருளாதார நிலை என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலைமையில் தேர்தல் பொருத்தம் அற்றது. அனைத்துத் தரப்பினரும் தேர்தல் நடவடிக்கைகளை விலக்கி வைப்பதே பொருத்தமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள் இவ்விடயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உரிய முடிவினை எடுத்து, அவசர நிலையைக் கருத்திற் கொண்டு கலைத்த நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மேலும்,

மருத்துவத்துறை மூலம் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்ற நெறிவுறுத்தல்களை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து தம்மையும், தம்மைச் சுற்றியுள்ளவர்களையும், முழு நாட்டையும் பாதுகாக்கும் சிறந்த உளப்பாங்குடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். (150)

Related posts

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு மோனலிசா ஓவியம் ஏலம்!

Tharani

நிலக்கரி ரயில் நானுஓயாவில் இருந்து இன்று புறப்படும்!

Tharani

மட்டக்களப்பில் பெண் மீது வாள்வெட்டு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.