செய்திகள் பிராதான செய்தி

தேர்தல் பிரச்சார செலவில் கோத்தாபய முதலிடம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய 3 பிரதான கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 1,315 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக 784 மில்லியன் ரூபாய் இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளது.

அதேபோன்று சஜித் பிரேமதாச போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி 496 மில்லியன் ரூபாய் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சார்பாக இந்த காலப் பகுதியில் 35 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அட்டவணை

Related posts

சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு இலக்கிய விருது விழாவுக்கு விண்ணப்பம் கோரல்

Tharani

ரஞ்சனுடன் பேசிய நீதிபதி பணி நீக்கம்!

G. Pragas

தபால் சேவையை வினைத்திறனாக்க நடவடிக்கை

reka sivalingam

Leave a Comment