செய்திகள்

தேர்தல் வன்முறை – 44 பேர் கைது!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் இரண்டாயிரத்து 672 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய சுமார் 2553 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனுடன் சேர்த்து மொத்தமாக 2672 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்குகள் அரசியலில் இறங்கியதே பிரச்சினை – சிவமோகன்

G. Pragas

பயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை

G. Pragas

நெல்லியடிப் பொலிஸார் கைது செய்த குடும்பஸ்தர் மரணம்!

G. Pragas

Leave a Comment