செய்திகள் பிந்திய செய்திகள்

தேர்தல் விளம்பரங்களை தடுக்க பேஸ்புக்கிடம் கோரிக்கை

கட்டணம் செலுத்தப்பட்ட அரசியல் விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், இவ்வாறு விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (14) அதிகாலையுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், வேட்பாளர்களுக்கான பிரசாரம் பேஸ்புக்கில் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆறுமுக நாவலரின் 140வது நினைவு நாள்!

Tharani

சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

கதிர்

இராணுவ பிரசன்னம் வீதிகளில் அதிகரிப்பு

Bavan