இந்தோனேசியா – மக்காசரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றுக்கு வெளியே குருத்தோலை ஞாயிறான இன்று (28) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு தற்கொலைதாரிகள் குண்டைவெடிக்கவைத்து பலியாகியுள்ளனர் என இந்தோனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் தேவாலயத்திற்குள் பிரார்த்தனைக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.