செய்திகள் பிரதான செய்தி

தே.அ.அட்டை விநியோகத்திற்கு குறுந்தகவல் சேவை

தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்காக தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் , அவை தொடர்பில் தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வாரங்களில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக , தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருகை தருவோர் தமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்ள முடியுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

Related posts

மன்னார் 5,653 ஏக்கர் நெற் செய்கை பாதிப்பு!

Tharani

கொரோனா பலியெடுப்பு; 258,338 ஆகியது!

G. Pragas

குணமடைந்தோருக்கு இப்போதும் தொற்றுள்ளது!

G. Pragas