இந்திய செய்திகள் செய்திகள்

தொடர்பை இழந்தது இந்தியாவின் சத்திரயான்-2

இன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 – 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ம் திகதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தச் சந்திரயான்-2ல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும்.

இந்நிலையில் செப்டம்பர் 7ம் திகதி அதிகாலை 1:30 – 2:30 மணி அளவில் லேண்டர் நிலவின் மேற்பரப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் காலை 5:30 – 6:30 மணி அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் ரோவர் தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருந்தது. எனினும் இச்சந்தர்ப்பத்திலேயே லேண்டர் தொடர்பு இழந்துள்ளது என்று இஸ்ரோ அறிவித்திருக்கின்றது.

திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால் பாறைகள், தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியை கண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் லேண்டர் தரை இறங்கியிருக்கும்.

Related posts

கைதுக்கு தடை காேரி நீதிபதி ஜிஹான் மனுத்தாக்கல்

reka sivalingam

சடலத்துடன் காணாமல் போன தந்தை – மகன்; தீவிர விசாரணை

G. Pragas

தொண்டைமானாறு மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

G. Pragas