செய்திகள் பிரதான செய்தி மலையகம்

தொண்டமானின் இடத்தில் மகன் ஜீவன் போட்டி!

மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம் சார்பில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் (26-வயது) போட்டியிடுவார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தூதுகுழு பிரதமருக்கு தெரிவிப்பு.

தேர்தலில் போட்டியிடும் ஒருவர் திடீரென மரணமடைந்தால் அவரின் இடத்திற்கு மூன்று நாட்களுக்குள் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இதன்படி இன்று (27) கூடிய இதொகா தலைமை தொண்டமானின் இடத்துக்கு ஜீவனை நியமிக்க முடிவெடுத்தது.

இதனை தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இதொகா தூதுக்குழு கட்சியின் இந்த முடிவை தெரிவித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இதொகா போட்டியிடுவதால் முறைப்படி பெரமுனவின் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து பின்னர் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு?

G. Pragas

பெரஹரவுக்கு அனுமதி – எவரும் பங்கேற்க முடியாது!

G. Pragas