செய்திகள் பிரதான செய்தி மலையகம்

தொண்டமானுக்காக கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகம்

அமரர் ஆறுமுகம் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.

கடந்த 27ம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சரவை பேச்சாளரும் உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். மேலும்,

‘தோட்ட மாணவர்களுக்கு உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்துவது ஆறுமுகம் தொண்டமானின் விசேட எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இது வரையில் அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஒன்றும், சந்ததென்ன என்ற இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகம் ஒன்றும், அம்பேவல தாவரவியல் உயிரியல் கட்டமைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் கல்வி அமைச்சினால் அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக ஆறுமுகம் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் அவரது எதிர்பார்ப்பான தோட்ட மாணவர்களுக்கான கொட்டகலை தேசிய பல்கலைக்கழகத்தை ஒரு வருட காலத்திற்குள் விரைவாக அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது’. – என்றார்.

ஏனைய அமைச்சரவை தீர்மானங்கள்,

  • ஈ.ஏ.பி எதிரிசிங்க நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டதன் காரணமாக சிரமங்களுக்கு உள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கோரப்பட்ட மத்திய வங்கியின் அறிக்கையை சமர்ப்பித்தல்.
  • கொவிட்-19 நிலைமையினால் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடன் திட்டமொன்றை வகுத்தல்.
  • தற்பொழுது உள்ள நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள அழைக்கும் வேலைத்திட்டம் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள அழைத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
  • சர்வதேச வர்த்தகம் மற்றும் சுங்க அடிப்படையிலான வரிக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்தல்.
  • உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் புதிய மதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பீட்டு வரி திருத்தத்தமின்றி 2 வருட காலம் வரையிலும் நடைமுறையிலுள்ள வகையில் வசூலித்தல்.
  • பொதுமக்களுக்கு கட்டுப்படக்கூடிய விலைக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல். நிவாரண வட்டிக்கு 20 -30 வருட காலத்திற்குள் செலுத்தக் கூடிய வகையில் கடன் வழங்கல்.

Related posts

மாத்தளை மேயர் தல்ஜித் ஆலுவிஹரே கைது!

Bavan

தமிழ் தொழிலாளர்களை காவு கொள்ளும் மது!

Tharani

தேர்தல் விஞ்ஞாபனம் மஹாநாயக்கரிடம் கையளிப்பு

G. Pragas