கிழக்கு மாகாணம் செய்திகள்

முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

ஊரடங்குச் சட்டம் காரணமாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்கல் செயற்பாடுகளை தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் தனித்தும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்துடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினரால் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சிறுவர் இல்லம், திருஞான சம்பந்தர் சிறுவர் இல்லம், ஓசானம் இல்லம், மட்டக்களப்பு முதியோர் இல்லம் மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியவற்றில் உள்ள சிறுவர்கள், முதியோர் மற்றும் ஊழியர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உறுப்பினர்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

“நாடாளுமன்றத் தேர்தலில் ததேக தனித்துப் போட்டியிடும்”- சிறிகாந்தா

Tharani

மட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்

G. Pragas

பகிடிவதை குறித்து கடும் நடவடிக்கை வேண்டும் – இராதா

reka sivalingam