படகு விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு பாலம் அமைக்கும் பணி விவகாரத்தில் உரிய தீர்வு இல்லை என்றுகூறி ஆக்ரோசமடைந்த பொதுமக்கள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் வீட்டின் பல பகுதிகளும் நொருக்கப்பட்டள்ளன. உடமைகளும் சிதைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.