செய்திகள்

த பினான்ஸ் நிறுவன அனுமதி இரத்து; பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பில் உள்ள த பினான்ஸ் நிதி நிறுவனத்திற்கு எதிராக இன்று (26) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்துக்கு 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி வழங்கிய அனுமதிப்பத்திரம் கடந்த 22ம்திகதி இலங்கை மத்திய வங்கியால் இரத்து செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பினான்ஸ் கிளைகளும் மூடப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றயதினம் நீர்கொழும்பு த பினான்ஸ் நிறுவனம் முன்பாக ஒன்றுகூடிய வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பிரதமரே நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்களே, எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த அனைவரையும் நாங்கள் சபிக்கின்றோம், மதிய வங்கி 10 வருடங்களாக த பினான்ஸ் நிறுவனத்தால் வழிநடத்தப்பட்டது எம்மை ஏமாற்றவா?’ போன்ற வாசகங்களை கொண்ட சுலோகங்களை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘மதிய வங்கி அனுமதி அளித்த நிதி நிறுவனமாக த பினான்ஸ் இருந்ததால் நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்த பெருந் தொகையான பணத்தை இங்கு வைப்பிலிட்டோம். எங்கள் பணத்துக்கு மதிய வங்கியும், அரசாங்கமுமே பொறுப்பு கூற வேண்டும்.

நாங்கள் அனைவரும் இந்த ஜனாதிபதியை தெரிவு செய்தது நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கத்தான். ஜனாதிபதி எங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் அல்லது எங்களுக்கு வீதியில் இறங்கி உயிரைவிடுவதை தவிர வேறு வழியில்லை’ – என்று தெரிவித்தனர்.

Related posts

13 அம்சக் கோரிக்கைகளை சஜித் ஏற்கத் தயாரில்லை

G. Pragas

புத்தளத்தில் காெராேனா பரவ வாய்ப்பு; கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

G. Pragas

வவுனியா விபத்தில் நால்வர் காயம்- புத்தாண்டில் சோகம்

reka sivalingam