in

நகரங்களின் சுய முடக்கத்தை வரவேற்கிறாராம் இராணுவத்தளபதி!

நகரங் க ளின் சுய முடக்கத்தை
வரவேற்கிறார் இராணுவத்தளபதி

நாட்டின் சில நகரங்களில் வர்த்தகர்கள் சுயமுடக்கத்தை முன்னெடுப்பதை வரவேற்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது

சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது. எவ்வாறாயினும், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டமையை வரவேற்கின்றேன்.

இந்தத் திட்டம் சாதாரண மக்களை பாதிக்காத வகையில், முன்னெடுக்கப்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக, வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் மக்கள் குறித்தும், சிந்தித்து செயற்பட வேண்டும்.

இதனால் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தாது, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இராணுவ தளபதி வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

209 மருத்துவர்கள், 1000 தாதியர்கள் தொற்றால் பாதிப்பு ஆறு பேர் சாவு!

சமூகத் தலைவர் சிலை தகர்ப்பு,பெண் ஆளுநர் கடத்தல், தலிபான்கள் வெறியாட்டம்!