சினிமா செய்திகள்

விஜயை குறி வைத்த வருமான வரித்துறை; என்ன காரணம்?

நடிகர் விஜய் உட்பட 38 பேரின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதன் நிமித்தம் 77 கோடி ரூபாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.

ஆயினும் விஜய் வீட்டில் எதனையும் பறிமுதல் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் எத்தனை நடிகர்கள் இருந்தும் விஜயை மட்டும் வருமான வரித்துறை எதற்கு அடிக்கடி வம்புக்கு இழுக்கின்றது என்ற கேள்வி தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் எழுந்த போது ஜி.எஸ்.டி வரியைப் பற்றிய கருத்துக்களை மத்திய அரசாங்கத்துக்கு எதிராக விஜய் தனது படங்களில் பேசியுள்ளார் இதனால் பாஜக எச் ராஜா ஏற்கனவே விஜயை விமர்சித்திருந்தார்.

அதோடு கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பிகில் 300 கோடிகளுக்கு மேல் உழைத்திருந்ததால் இதனை சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் வருமான வரித்துறையினர்.

Related posts

தமிழர்கள் கடத்தல்; வசந்தவுக்கு மீண்டும் அழைப்பாணை!

reka sivalingam

நாடளாவிய ரீதியில்அதிக உயிர்களை பலி எடுத்த டெங்கு

reka sivalingam

200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

reka sivalingam

Leave a Comment