சினிமா செய்திகள்

நதிகளை மீட்க நடிகைகள் கூக்குரல்

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2 ஆவது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இயக்கத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகைகள் கங்கனா ரணாவத், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் காவிரி கூக்குரலுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கங்கனா ரணாவத் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முப்படையினருக்கான பொது மன்னிப்பு – இன்று முதல் அமுல்

reka sivalingam

தொலைபேசிகளில் வட்ஸ் அப் இயங்காது?

Tharani

மாகாண சுகாதார அமைச்சின் முறையற்ற செயலினால் முற்றுகையிட்ட மக்கள்

G. Pragas

Leave a Comment