உலகச் செய்திகள்செய்திகள்

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – போரிஸ் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்றில் ஆளுங்கட்சி எம்.பிக்களால் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் வெற்றிபெற்றுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையின் போது ஊரடங்குச் சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜோன்சன் நடத்தினார்.

இதற்கு கண்டனம் எழுந்த நிலையில் தவறுக்கு போரிஸ் ஜோன்சன் மன்னிப்பு கோரினார்.

அதேவேளை பிரித்தானிய ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் கடந்த 2021 ஏப்ரலில் காலமானார். அவரது இறுதி சடங்கின்போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மதுவிருந்து நடத்தியது பேசும் பொருள் ஆனது, இதனால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

இது குறித்து லண்டன் பொலிஸார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த இரு விவகாரங்களை முன்வைத்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக அவரது கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வந்தனர்.

அத்துடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் தலைமைக்கு கோரியநிலையில் போரிஸ் ஜோன்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994