சினிமா செய்திகள்

நயனின் அடுத்த படம்

நயன்தாரா தற்போது விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ள, இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது. இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இணைய தொடரில் நடித்து பிரபலமானவர் ஆவார்.

மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாழைச்சேனையில் உணவகம் தீக்கிரை

கதிர்

எடெக்ஸ் எக்ஸ் போ கண்காட்சி இன்று ஆரம்பம்

Tharani

இலவசமாக உரம் வழங்கல்

reka sivalingam