in , ,

நயினாதீவு ஆலய நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலய அறங்காவலர் சபையினர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூஜைகள் இடம்பெறுகின்றன.

இத்துடன் அடியவர்களின் நேர்த்திகள் , அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும்.

இதனால் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்துக்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ரோஹண உட்பட 8 பேருக்கு இடமாற்றம்

மின்சார இயந்திர பொறியியல் படையணியால் நாட்டுக்கு பல மில்லியன் சேமிப்பு!