தேரர்கள் உள்ளிட்டோரை இழிவுபடுத்தி, இன நல்லிணத்துக்கு விரோதமாக முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்ட குற்றச்சாட்டில் மொஹம்மட் நிசார் என்ற வர்த்தகர் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியால் கைது செய்யப்பட்ட அவரை கொழும்பு நீதிமற்றில் ஆஜர்ப்படுத்தி 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் இழப்புக்களை சந்தித்த குறித்த வர்த்தகர் ஆடம்பரமாக வாழ்வதாகவும், அவருக்கு பணம் கிடைப்பது தொடர்பிலும் விசாரணை செய்யப்படும் என்றும் சிஐடியினர் தெரிவித்தனர்.