செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

நல்லூர் கிராம சேவர்களிடம் ஜனாதிபதி செயலக பெயரில் பண மோசடி!

நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவர்களை கைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் 39 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி செய்துள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம் (21) கைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலக அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு “உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தை ‘ஈசி காஸ்’ மூலம் அனுப்பி வையுங்கள்” என கோரியுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாயும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை ‘ஈசி காஸ்’ மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வண்ணமயமாக்கும் முயற்சியில் கிளிநொச்சி இளைஞர்கள்

கதிர்

மன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்!

G. Pragas

கந்தபுராணத்து வள்ளியம்மை நூல் வெளியீடு

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.