செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி

யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

இராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள். யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்.” – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940