in ,

“நவரசா” வெப் தொடர் ஓகஸ்ட் 6 இல் ஒ.டி.டி தளத்தில் வெளியீடு

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், க்யூப் சினிமாஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் நவரசா வெப் தொடர் ஓகஸ்ட் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.

கோபம், ஆசை, சோகம் போன்ற ஒன்பது குணங்களை குறிப்பது நவரசா.

இதன் அடிப்படையில் மணிரத்னத்தின் யோசனையில் உருவாகியிருக்கும் வெப் தொடர் நவரசா. ரதீந்திரன் ஆர்.பிரசாத், அரவிந்த்சாமி, கௌதம் வாசுதேவ மேனன், கார்த்திக் நரேன், பிஜோய் நம்பியார், ஹலிதா ஷமீம், ப்ரியதர்ஷன், கார்த்திக் சுப்பாராஜ், வஸந்த் ஆகியோர் நவரசாவில் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்கள் ஒன்பது பேரும் தனித்தனியாக இயக்கிய படங்களின் தொகுப்பே நவரசா.

சூர்யா, சித்தார்த், அரவிந்த்சாமி, விக்ராந்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்பட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் பங்களிப்பில் தயாராகியிருப்பதால் நவரசா வெப் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நவரசா வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

யாழ் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைப்பு! தேர்தல் திணைக்களம் தீர்மானம்!

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யோகிபாபு