செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

நவாலி கொள்ளை; மூவருக்கு விளக்கமறியல்!

நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதியில் கடந்த 29ம் திகதி திருமண விழாவின் காணொளிப் பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதியில் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தை அடுத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நாகேஸ்வரன் என்பவருடைய சகாக்களே இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டது என்று தடயங்கள் மூலம் பொலிஸார் கண்டறிந்தனர்.

அதனடிப்படையில் சங்கானை, கட்டுடை மற்றும் நவாலியைச் சேர்ந்த மூவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையிலயே நேற்று (31) நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்ப்படுத்திய போது மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

G. Pragas

பிரச்சினைகளை வைத்திருக்காமல் அகற்றி விட வேண்டும் – கோத்தாபய

G. Pragas

பொலிஸ் தலைமையக கத்திக் குத்தில் நால்வர் பலி!

G. Pragas

Leave a Comment