கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நவீன முறையில் கசிப்பு உற்பத்தி; ஒருவர் பிடிபட்டார்!

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் நவீன இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று முன் தினம் மதுவரித் திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டது.

இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமங்களை அண்டியுள்ள காடுகளிலும் ஆற்றங்கரைகளை அண்டிய பகுதியிலுமே கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தன.

இந்த நிலையின் அன்றைய தினம் மட்டக்களப்பு பார் வீதியில் சீலாமுனை பகுதியொன்றில் உள்ள வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவ்வாறு முற்றுகையிடப்பட்டது.

இதன்போது நவீன முறையில் கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் நான்கு போத்தல்களில் இருந்த 2500 மில்லி லீற்றர் கசிப்பும், கசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள் கலவைகள் 10 ஆயிரம் மில்லி லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (150)

Related posts

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் குறைக்கப்படும்

reka sivalingam

பொலிஸ் போதை ஒழிப்பு பணியக தலைவரை இடம்மாற்ற கோரிக்கை!

G. Pragas

யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை

reka sivalingam