சினிமா செய்திகள்

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்

இயக்குனர் பிறைநிலா கிருஷ்ணராஜா இயத்தில் உருவாகிய 18 நிமிடங்களை கொண்ட ‘நாங்களும் இருக்கிறம்’ ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும் நிகழ்வு எதிர்வரும் (15) அன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன நூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ஆரம்ப உரையை பிரிந்தா ஆற்றுவார், அதன்பின்னர் திரையிடல் இடம்பெறுவதுடன் இயக்குனருடனான பிறைநிலா கிருஷ்ணராஜா உடன் ‘மாற்றுப்பால் நிலையினரின் இருப்பும் சிக்கல்களும்’ என்ற தலைப்பில் தேன்மொழி, ரொஷானி, ஏஞ்சல் ஆகியோர் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த ஆவணத் திரையிடல் தொடர்பில்,

“யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் சந்திப்புகளின் மூலமாகவும் உரையாடல்களினூடாகவும் ஊடான ”நாங்களும் இருக்கிறம்” என்கிற ஆவணப்படமாக தொகுப்பாக்கியிருக்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா.

இலங்கைத் தீவில் வாழ்கின்ற மாற்றுப் பாலினத்தவர் பற்றிய அறிதலும் அவர்கள் பற்றிய அக்கறையும் நமது சமூகங்களிடம் குறைவாகவே இருக்கின்றது. அவர்களது இருப்புக் குறித்தும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் அறிவதற்கான எதுவிதமான எத்தனமும் செய்யாமல் அசட்டையீனமாகவே பெரும்பான்மை மக்கள் இருக்கின்றார்கள் அல்லது தவறான புரிதல்களுடனும் முன்முடிவுகளுடனும் தொடர்ந்தும் இருந்துவிடுகின்றார்கள். ஊடகச் சித்திரிப்புகள் தொடங்கி சினிமா வரை மாற்றுப் பாலினத்தவரை கேலியுடனும் எதிர்மனோநிலையுடனும் அணுகும் போக்கே பரவலாக உள்ளது. பாலியல் குறித்தோ அல்லது பாலினம் குறித்தோ நமது பாடசாலைகள் என்ன கற்பிக்கின்றன? பாடசாலைகளில் மாற்றுப்பாலினத்தவர் எப்படி நடத்தப்படுகின்றனர்? பொதுவெளிகள், குடும்ப உறவுகள் போன்றவை மாற்றுப்பாலினத்தவரை எப்படி எதிர்கொள்ளுகின்றனர்? மாற்றுப்பாலினத்தவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றது ? போன்றவற்றை அறிந்துகொள்ளவும் அதிலிருந்து உரையாடல் ஒன்றைத் தொடக்குவதற்குமான சீரியதோர் முயற்சியாகவும் செயற்திட்டமாகவும் இந்த ஆவணப்படத்தினை பிறைநிலா கிருஷ்ணராஜா உருவாக்கியிருக்கின்றார்.

மாற்றுப் பால்நிலையினரின் இருப்பைக் குறித்தும் அவர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் சமூக அவலங்களைக் குறித்தும் அக்கறை கொண்டவர்களுக்கும் இந்த ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்கல்களுக்கும் எதிராகச் செயலாற்றி மாற்றுப்பாலினத்தவர்களுக்கான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்குடையவர்களுக்கும் மாற்றுப்பாலினருடன் உரையாடிச் செயற்படுவதற்கான ஒரு பொது வெளியைத் திறப்பதை நோக்காகக் கொண்ட கலந்துரையாடலும் திரையிடலின் பின்னர் நடைபெறவுள்ளது” இவ்வாறு நிகழ்வை ஏற்பாடு செய்த விதை குழுமம் தெரிவித்தது.

Related posts

தேர்தல் வன்முறை – 44 பேர் கைது!

G. Pragas

யாழ் மாநகர கட்டடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

G. Pragas

ஈழ ஆதரவும் புலி ஆதரவும் ஒன்றல்ல- அயூப்கன் பிச்சை

G. Pragas

Leave a Comment