செய்திகள்

நாடாளுமன்றம் 7ம் திகதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி மதியம் 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபைத்தலைவர் தினேஸ் குணவர்தனவினால் நாடாளுமன்ற ஒத்திவைப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

08 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் இன்று (03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் இன்று மதியம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூட்டப்பட்ட நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – கோத்தாபய

G. Pragas

ஓகஸ்ட் வரையில் தேர்தல் இல்லை?

reka sivalingam

யாழ் பல்கலை மாணவர்களின் தமிழமுதம் விழா இனிதே ஆரம்பம்

Bavan

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.