செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டமைப்பின் முடிவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒருமித்து, ஒற்றுமையாக எவ்வாறு எதிர்கொள்வது என இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிளவுபடாமல் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி, ஒன்றாக கூடி எதிர்வரும் தேர்தலில்  தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தனது கருத்து எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதுக்கும், ஏனைய கருமங்களை கையாளுவதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையா அவர்களுக்காக நீண்டகாலமாக செயற்படக்கூடிய கட்சியின் பின்னால் நிற்க வேண்டியது அவசியம் என  தமது உறுப்பினர்கள் கூறியதாக இரா.சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து மீண்டும் விரைவில்  கூடி ஏனைய முடிவுகளை எடுத்த பின்பு மக்களுக்கு தமது முடிவினை அறிவிக்கப் போவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசேட கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்கா, தலிபான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறு

Tharani

அரசியல் இலாபங்களை கருத்திற் கொண்டு செயற்படக் கூடாது…!

Tharani

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை!

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.