செய்திகள்

நாடு திரும்பினார் சந்திரிகா – 5ம் திகதி விசேட கூட்டம்

பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று (28) நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய சந்திரிகா அம்மையார், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை எதிர்க்கும் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த கூட்டம் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்

Tharani

இன்றைய நாணயமாற்று விகிதம் – 03.01.2020

Tharani

தாவடியில் 4 வயது சிறுமிக்கு கொரோனா ?

reka sivalingam