செய்திகள்

நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட இடமளிக்க முடியாது

ஜனநாயகம் என்ன போர்வையில் நாட்டில் ஊழல் மோசடிகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரணை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட, நாட்டின் சொத்துக்களை சேதமாக்க இடமளிக்க முடியாது.

அதன் காரணமாக நேரடி தீர்மானங்களை மேற்கொள்ள சிறந்த தலைவர் ஒருவர் நமக்கு தேவை.

அதற்கு இந்த வருடம் ஒரு சிறந்த வருடமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

இதை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், பொதுமக்கள் எம்மையும் துரத்தியடிப்பார்கள்.

அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்களுக்கு அந்தந்த கட்சிகளினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சிறந்த வேட்பாளர்களை களமிறக்க அந்தந்த கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கட்டாயம் மேற்கொள்ளப் பட வேண்டும்.

இந்த பயணத்தை திருடர்களை வைத்துக் கொண்டு செல்ல முடியாது.

அரசியல்வாதி ஒருவரை சிறையில் வைப்பது என்பதும், பொதுமகன் ஒருவரை சிறை வைப்பதும் ஒன்றே.

நாம் அனைவரும் குடிமக்கள். எனினும் எவராவது குற்றம் புரிந்திருந்தால் அந்த குற்றத்திற்கு சட்டத்தின் படி தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.

Related posts

சுதந்திரபுரத்தில் வெடி பொருள் மீட்பு!

G. Pragas

அழகிப்பட்டம் வென்ற கரோலின் இலங்கையை வந்தடைந்தார்

reka sivalingam

இலங்கையில் ஒருவருக்கு கொரோனா; உறுதியானது!

G. Pragas