செய்திகள்பிரதான செய்தி

நாட்டில் அரையாண்டில் மட்டும் 6 லட்சம் கடவுச்சீட்டு விநியோகம்!

இலங்கையில் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மாத்திரம் சுமார் 6 லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனக் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த இடம்பெயர்வு முனைப்புக்களானது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே தீவிரமடைந்துள்ளமையை குறிக்கிறது.

இதுகுறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவிக்கையில்,

திணைக்கள வரலாற்றின் படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் விநியோகம் 2016 ஆம் ஆண்டில் பதிவாகியது. அவ்வாண்டில் 6 லட்சத்து 58ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.

எனினும் இந்த ஆண்டில் முதல் ஏழு மாதங்களிலேயே சுமார் லட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டமையால் அந்தச் சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்– என்றார்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051