செய்திகள் பிரதான செய்தி

நாட்டில் மீண்டும் மின் தடை அமுலாகும்?

நாட்டில் மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் (03) எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நாட்டின் பல பகுதிகளிலும் இரண்டு மணி நேர மின்தடை அமுல்படுத்தப்பட்டது.

அண்மைய நாட்களில் இந்த மின்சாரப் பற்றாக்குறை காரணமாக பெப்ரவரி மாதத்தில் இருந்து மின்தடை அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதனை அரசாங்கம் மறுத்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த மின்வெட்டு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நிலவும் தாமதம் காரணமாகவே இந்த மின் வெட்டு அமுலானதாக தெரியவருகின்றது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இவ்வாறு இரண்டு மணி நேர மின்வெட்டு சுழற்சி முறையில் அமுல்படுத்தப்படலாம் என “உதயன்”க்கு தகவல் கிடைத்துள்ளது.

Related posts

ஜா-எல நாய்க்கு கொரோனா! – இது ஆபத்தான விடயமா?

G. Pragas

மேலும் ஒருவருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 143 ஆனது!

Bavan

தேர்தல் சட்டத்தை மீறி போராட்டம்; 26 மாணவர்கள் கைது

G. Pragas