in

நாட்டில் மேலும் 83 ஆயிரத்து 44 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் நேற்று 83 ஆயிரத்து 44 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

72 ஆயிரத்து 887 சினோபாம் தடுப்பூசிகளும், 10 ஆயிரத்து 157 ஸ்புட்னிக்வி தடுப்பூசிகளுமே இவ்வாறு மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட், சீனாவின் தயாரிப்பான சினோ பாம், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்வி ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 310 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

நாட்டில் இன்னும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் கொவிட் உயிரிழப்புக்கள்!

புதிய பொலிஸ் தலைமையகம் – அமைச்சரவை அனுமதி