செய்திகள்பிரதான செய்தி

நாட்டு மக்களுக்கு – அதிரடிச் சலுகைகளை அறிவித்தது அரசு!!!

இந்தமாதம் (ஜனவரி) தொடக்கம் அரச பணியாளர்களுக்கு மாதாந்தம் மேலதிக கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும், அத்தியாவசியப் பொருள்கள், மருந்துப் பொருள்களுக்கான வரியை நீக்கவும் இன்ன பிற சலுகைகள் பலவற்றை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று அதிரடி அறிவிப்பை விடுத்தார்.

அவர் நேற்றிரவு நடத்திய ஊடக சந்திப்பில் இந்தச் சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவிப்பை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச அலுவலர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம், அவசியமான உணவு, மருந்துகளுக்கு வரி நீக்கம்,சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஆயிரம் கொடுப்பனவு,. ஓய்வூதியர்களுக்கும் 5 ஆயிரம் கொடுப்பனவு, தோட்ட மக்களுக்கு மாதாந்தம் 15 கிலோ மா ஆகிய சலுகைகளை வழங்கவுள்ள்தாக தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அவற்றின் விலை அதிகரித்துள்ளது. வாழவழியின்றி மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விலைச்சலுகை வேண்டும், பொருள்களின் விலையைக் குறை என்றவாறெல்லாம் கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், அதிரடிச் சலுகைகளை வழங்கவுள்ளோம் என்று அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

ஆனால், அத்தியாவசிய உணவுப் பொருள்களை நாட்டு மக்களுக்கு இறக்குமதிசெய்து வழங்கமுடியாதளவுக்கு, டொலர் பற்றாக்குறையாகவுள்ளது என்றுகூறி மேற்குறித்த பொருள்களை துறைமுகத்தில் வைத்துக்கொண்டிருந்த அரசாங்கம், நாணயத்தை விடுக்க தடுமாறிக்கொண்டிருந்த அரசாங்கம், திடீரென்று இத்தகைய சலுகைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுகின்றது, சந்தேகம் ஏற்படுகின்றது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இவ்வளவு சலுகைகளையும் அறிவிப்புச்செய்த அரசாங்கம், அறிவித்ததுபோன்றே அவற்றை நடைமுறைப்படுத்துமா? நிதியில்லை என்று கைவிரித்திருந்த அரசாங்கம், அதற்கான நிதியை எவ்வாறு திரட்டப்போகின்றது? என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
பொதுமக்களின் போராட்டங்களையும் தொழிற்சங்கங்களின் எழுச்சியையும் இல்லாமல் செய்வதற்குத்தான் இப்படியொரு அறிவிப்பை அரசு விடுத்திருக்கவேண்டும் என்றும் அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051