uncategorized

நாட்டு மக்களுக்கு பிரதமர் கருத்து…

கொவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கான சக்தியும் இயலுமையும் இலங்கையர்களுக்கு உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

வைரசை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரும் அரசாங்கமும் விடுக்கும் அறிவித்தல்களை உரியவாறு கடைப்பிடிக்குமாறும் பிரதமர் மக்களை கேட்டுள்ளார்.

யுத்த காலத்தில் கூட நாடு முழுவதையும் ஒன்றிணைத்து ஊரடங்க சட்டம் அமுல்படுத்தவில்லை என கூறிய பிரதமர் ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கு காரணம் எனவும் கூறினார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

சுதந்திரக்கட்சி தலைமையில் 17 கட்சிகள் கூட்டு

கதிர்

போக்குவரத்திற்கு பொருத்தமற்ற பேருந்துகள் இடைநிறுத்தம்

கதிர்

2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை விபரம் வெளியீடு

reka sivalingam

Leave a Comment