செய்திகள் பிரதான செய்தி

நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே வழி – மஹிந்த

நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றின் பின்னரான இலங்கை எனும் தொனிப்பொருளில் பிரதமர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

2019 பெப்ரவரி 16, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, வீழ்ச்சியடைந்த பொருளாதாரமே எஞ்சியது. அவ்வாறான நிலையிலேயே கொரோனா தொற்றினால் உலகமே நிலைகுலைந்துள்ளது.

கொரோனா தொற்றினால் 1930களின் பின்னர் ஏற்பட்ட பாரிய சரிவிற்குச் சமமான உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் சுபீட்சம் தேடி வௌிநாடுகளுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் மட்டுப்படுத்தப்படும்.

பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலம் இருள் சூழந்ததாக அமையும். அண்மையில் அரச சேவையின் உயரதிகாரியான ஜனாதிபதி செயலாளர் ஜயசுந்தர, சம்பளத்தின் முடிந்தளவு தொகையை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தபோது எதிர்க்கட்சியினர் அவரை விமர்சித்தனர்.

திறமையான அதிகாரிகளைத் தாக்கி அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை முடக்குவது எதிர்க்கட்சியின் நோக்கம் என்பது தௌிவாகிறது. சேறுபூசுதல் மற்றும் பொய் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி அரசியல் கலாசாரத்திற்கு கொரோனாவின் பின்னரான உலகில் இடமில்லை.

பூகோள நிலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால இருப்பைப் பேணல் நாட்டை நிர்வகிப்பவர்களின் திறமையிலேயே தங்கியுள்ளது. கொரோனா தொற்று இலங்கையில் பரவியபோது நல்லாட்சிக் குழு ஆட்சி நடத்தியிருந்தால், நாட்டிற்கு நேர்ந்திருக்கும் நிலை குறித்து புதிதாகக் கூற வேண்டியதில்லை.

ஜனாதிபதியிலிருந்து கீழ் மட்டத்திலுள்ள அனைவரும் வெற்றிகொள்ள முடியாது எனக் கூறப்பட்ட யுத்தத்தை வெற்றிகொண்டு 2006-2014க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியிலும் பாரிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தினோம்.

கொரோனா தொற்றின் பின்னரான உலகில் இலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவ்வாறான தலைமைத்துவமே அவசியம் – எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்த அரசு பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகிறது- சி.வி.கே

reka sivalingam

ஒருவரை பலிவாங்கிய காத்திக்குத்து தாக்குதல் சந்தேக நபர் சரண்!

G. Pragas

வெள்ளாம்போக்கட்டியில் வாள் வெட்டு; மூவர் காயம் – மோ. சைக்கிளும் எரிப்பு! – (அப்டேட்)

G. Pragas