செய்திகள்பிந்திய செய்திகள்பிரதான செய்தி

நாட்டை மீட்டெடுக்கத் தேவை நல்லிணக்கமே

தற்போதைய அரசு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனை சுபத்திராராமய விகாரைக்கு நேற்று (31) விஜயம் செய்து ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

மேலும், நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று பொருளாதாரம், நல்லிணக்கம் தொடர்பிலான நெருக்கடி நிலை உணரப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து நாட்டினை பாதுகாக்க பொறிமுறை ஒன்றினை கட்டியெழுப்ப என்னால் முடியும் என்பதுடன் முன்னைய அரசாங்க காலத்திலும் அதற்கான சவால்கள் காணப்பட்டதாகவும் எனினும் இன்று அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் திணறுகின்றது. என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282