அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
தீவிரமான மருத்துவ சிக்கலினால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா எதிர்வரும் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதாகவும் அவருக்கு பதிலாக சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் சேர்க்கப்பட்ட ஷார்துல் தாக்கூர் மற்றும் டி நடராஜன் இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இதேவேளை மெல்பேர்னில் வலை பயிற்சியில் ஈடுபட்ட மாயங்க் அகர்வாலின் உடற்தகுதி குறித்தும் இந்தியா நிர்வாகம் கவலைக் கொண்டுள்ளது.
இதேபோல கட்டைவிரல் உபாதைக் காரணமாக ரவீந்திர ஜடேஜா தொடரிலிருந்து விலகியுள்ளார். சிட்னி டெஸ்டின் இறுதி நாளில் வலியால் துடுப்பெடுத்தாடிய அஸ்வின், தொடை எலும்பு உபாதைக் காரணமாக ஹனுமா விஹாரி ஆகியோரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.