in ,

நான்காவது டெஸ்ட்; பலமான நிலையில் அவுஸ்திரேலியா!!

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சேகன் (108), மத்திவ் வாட் (45) ஓட்டங்களை பெற்றனர். களத்தில் ரிம் பெயின் (38*) கமரோன் க்ரீன் (28*) ஓட்டங்களுடன் உள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், சர்துல் தாகூர் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

பல்கலைக்கழக தூபிக்கு அத்திபாரமிடும் பணி ஆரம்பம்!

சிறுமியை இருமுறை கடத்தி வன்புணர்ந்த நபர்; கைது செய்ய உதவி கோரல்!