செய்திகள்

நான் அடிபணியேன் – சஜித் பிமேதாச

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன். மனசாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுப்பேன். எவரினதும் கைப்பாவையாக செயற்படமாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத்துகமையில் இன்று (25) மாலை நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நிபந்தனைகள் அடிப்படையிலேயே எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது என இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நான் எவரினதும் கைப்பாவை கிடையாது. அதேபோல் பதவிகளுக்காக நிபந்தனைகளை ஏற்று அரசியல் நடத்தியதும் இல்லை.

மனசாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுத்துவருகின்றேன். பதவிகளைவிட சுயகௌரவமும், நாடுமே எனக்கு முக்கியம் என்பதால் ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

பல சவால்களை எதிர்கொண்டு முற்கள் நிறைந்த பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றேன். இறுதிநேரத்தில் துரோகம் இழைக்கப்பட்டால்கூட எனது பயணம் தடைபடாது. செல்லவேண்டிய இடத்துக்கு நிச்சயம் செல்வேன். மக்கள் வழங்கும் ஆணையை உயிரிலும் மேலானதாக கருதி செயற்படுவேன்.

அதேவேளை, தற்போதைய அரசியலமைப்பில் உள்ளவாறு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும். அதேபோல் ஏனைய மதங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முப்படையினரை கடவுளாகவே பார்க்கின்றேன். அவர்களுக்கான நலன்புரி சேவைகளுக்கு எல்லைகளை வகுக்கமுடியாது – என்றார்.

Related posts

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த யுவதி மரணம்!

reka sivalingam

ஆளுநர் – ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்திப்பு

Tharani

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani